FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகளுடன் இணைந்து திரைப்படம் பார்த்த ரஜினி! எந்தப்படம்?

நடிகர் ரஜினி தன் மகளுடன் இணைந்து பார்த்த திரைப்படம்...

8 அக்டோபர் 2026, 3:44 pm IST
நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் சௌந்தர்யா உடன்.
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் புதிதாக வந்த திரைப்படமொன்றைத் தன் மகள் சௌந்தர்யாவுடன் இணைந்து பார்த்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தர்மன் திரைப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் சௌந்தர்யா தயாரித்த லவ் இணையத் தொடரை அவருடன் இணைந்து பார்த்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான இத்தொடர் பரவலாகப் பார்க்கப்பட்டு வரும் சூழலில் ரஜினியும் இதனைப் பார்த்துக்கொண்டிருக்கிற விடியோ வெளியாகியுள்ளது.

அதேநேரம், வழக்கமாக தமிழில் வெளியாகும் நல்ல திரைப்படங்களை ரஜினி வாழ்த்துவார். ஆனால், ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற மொத ராத்திரி, டோரதி, பத்தா ஆகிய படங்களை ரஜினி இன்னும் வாழ்த்தவில்லை என்பதையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Actor Rajinikanth watched a new movie together with his daughter Soundarya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments