FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் வெளியேறினார்! பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 2 புதுமுகங்கள்!

திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியது குறித்து...

6 செப்டம்பர் 2026, 7:34 pm IST
பிரஷாந்த் , பிருத்விநாத் , ஜாவித் - எக்ஸ்
பகிர்:

Bigg Boss 10 tamil: திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் ரங்கசாமி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் மேடையில் பிரஷாந்த் ரங்கசாமி உடன் மேலும் இருவர் நிற்கவைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் புதுமுகங்கள் இருவருக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால், குறைந்த வாக்குகளைப் பெற்ற பிரஷாந்த் ஏமாற்றத்துடன் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று (செப். 6) தொடங்கியது. விஜய் சேதுபதி மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

Advertisement

இந்த சீசனில் போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் புதுமையை வெளிக்காட்டும் விதமாக மூன்று போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரங்கத்தில் இருக்கும் மக்கள் மூவருக்கும் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்ற இருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதாவது, மற்ற சீசன்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை புதுமையாக, போட்டியாளர்கள் உள்ளே செல்வதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் திரைப்பட விமர்சகர் பிரஷாந்த், ஜெர்மனி மாணவர் பிருத்விநாத், சென்னையைச் சேர்ந்த கார்ப்பரேட் ஊழியர் ஜாவித் ஆகியோர் பிக் பாஸ் மேடையில் தோன்றினர்.

இதில் பிருத்விநாத், ஜாவித் ஆகியோர் அதிக வாக்குகளைப் பெற்றனர். பிரஷாந்த் குறைவான வாக்குகளையே பெற்றார். இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியின் 3 மற்றும் 4 வது போட்டியாளராக பிருத்விநாத், ஜாவித் ஆகியோர் உள்ளே சென்றனர்.

ஏற்கெனவே முதல் போட்டியாளராக மகாநதி தொடரின் நாயகி லஷ்மி பிரியா, நடிகை சாதிகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிருத்விநாத்

ஜெர்மனியில் உயர்கல்வி படித்து வருகிறார். சேலத்தை சேர்ந்த இவர் படிப்பு செலவுக்காக ஜெர்மனியிலேயே பணிபுரிந்து வருகிறார். அம்மா, அப்பாவை பெருமை அடையச் செய்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஜாவித்

10 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். ஆனால், சொல்லும்படியாக ஒரு அங்கீகாரம் கூட கிடைக்காததால், அதைப் பெறுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

summary

Bigg Boss 10 tamil Film Critic Prashant Quits 2 newcomers entered the Bigg Boss house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments