FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழில் எனக்குப் பிடித்த வார்த்தை இதுதான்: கயாடு லோஹர்

நடிகை கயாடு லோஹர் பேச்சு கவனம் பெற்றுள்ளது...

6 செப்டம்பர் 2026, 3:00 pm IST
கயாடு லோஹர்
பகிர்:

நடிகை கயாடு லோஹர் தமிழ் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக கயாடு லோஹர் வளர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படத்தால் தொடர்ந்து இதயம் முரளி, டொவினோ தமாஸுடன் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், பள்ளிச்சட்டம்பி பெரிய வெற்றியை பெறவில்லை. இதயம் முரளி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விருது விழா ஒன்றில் பேசிய நடிகை கயாடு லோஹர், “சினிமா பார்வையாளர்களுக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை ஒன்று இருக்கிறது. அது, ‘உயிரே’. அன்பைக் குறிப்பதால் அந்த வார்த்தை மிக பிடிக்கும். எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும். உங்களால்தான் நான் கொண்டாடப்படுகிறேன். இந்த நாளை மறக்க முடியாததாக மாற்றிவிட்டீர்கள். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Kayadu Lohar has spoken movingly about Tamil fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments