பான் இந்திய படம் என அழைக்காதீர்கள்... தி பாரடைஸ் புரமோஷனில் நானி ஆவேசம்!
நடிகர் நானி தி பாரடைஸ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருப்பதாவது...
தெலுங்கு நடிகர் நானி தி பாரடைஸ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், “இந்தப் படத்தை பான் இந்திய படம் எனக் கூறாதீர்கள்” எனப் பேசியுள்ளார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் நானி, கயாது லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக எதிர்வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் நானி பான் இந்தியா குறித்து பேசியிருப்பதாவது:
எனது படத்தை பான் இந்திய படம் எனக் கூறாதீர்கள். ஏனெனில், ஜவான் அல்லது பதான் படம் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ நன்றாக ஓடினாலும் அதனை ஹிந்தி படம் என்றே சொல்கிறோம். பான் இந்திய படம் எனக் கூறுவதில்லை.
மாறாக, ஒரு தெலுங்கு படம் இந்தியா முழுவதும் நன்றாக ஓடினாலும் அதனை தெலுங்கு படம் எனக் கூறாமல் பான் இந்திய படம் எனக் கூறுவது ஏன்?
இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன் என எனக்குப் புரியவில்லை. அதிலும் குறிப்பாக தென்னிந்திய படங்களுக்கு மட்டும் பயன்படுத்துவது ஏன் எனப் புரியவில்லை.
பல மொழிகளில் இருக்கும் ரசிகர்கள் படத்தைப் பார்ப்பது நல்ல விஷயம். ஆனால், இந்தப் பெயரில் இருக்கும் வேறுபாடுகள்தான் எனக்குப் பிடிக்கவில்லை என்றார்.
முன்னதாக 2022ல் வடக்கு - தெற்கு எனப் பிரிவினை வந்தது. அப்போது படங்களை நன்றாக எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அந்தப் படம்தான் அதற்கான பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Nani doesn’t want The Paradise called ‘pan-India’; here’s why
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.