மீண்டும் நடிக்க வந்த ஜீவன்!
நடிகர் ஜீவன் மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ளார்...
நடிகர் ஜீவன் மீண்டும் நடிகராக புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து கவனம் பெற்றவர் நடிகர் ஜீவன். காக்க காக்க திரைப்படத்தில் பாண்டியா என்கிற வில்லனாக நடித்து அசத்தியவர் தொடர்ந்து திருட்டு பயலே திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரவேற்பைப் பெற்றார்.
முக்கியமாக, 2007-ல் ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை திரைப்படம் அவருக்குப் பெரிய திருப்பத்தைக் கொடுத்தது. பின், ஜீவன் நடித்த திரைப்படங்கள் கவனிக்கப்படாததால் சினிமாவிலிருந்து விலகி அமெரிக்கா சென்றார்.
Advertisement
Advertisement
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீவன் மீண்டும் நடிகராக லவ்வர் பாய் என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Actor Jeevan has returned to acting in a new film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.