கல்வி அறிவற்ற செயல்... நடிகைகள் மீதான உருவ கேலிக்கு பரினீதி சோப்ரா கண்டனம்!
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிகைகள் மீதான உருவ கேலி பற்றிய பேட்டி குறித்து...
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா (37 வயது) படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், “தாயாகியுள்ள நடிகைகளின் உடல் எடைக் கூடுதலைப் பற்றி விமர்சிப்பது முற்றிலும் கல்வியறிவற்ற செயல்” எனக் கூறியுள்ளார்.
கடந்த நவம்பரில் நடிகை கத்ரீனா கைஃப் குழந்தையைப் பெற்றெடுத்து இருந்தார். அதனால் உடல் எடைக் கூடியுள்ள அவரை தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் கேலி செய்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
கத்ரீனா கைஃப்பிற்கு ஆதரவாக நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது சட்டையைக் கழற்றி, முடிந்தால் என்னையும் கேலி செய்யுங்கள் எனப் பேசியது இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.
Advertisement
Advertisement
ரென்சில் டி சில்வா இயக்கத்தில் நடிகை பரினீதி சோப்ரா ’ஷாக்: tரஸ்ட் நோ ஒன்’ என்ற தொடரில் நடித்து முடிதுள்ளார். இந்தத் தொடர் வரும் செப்.24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தொடரில் வெளியாகவிருகிறது.
இந்தத் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பரினீதி சோப்ராவிடம் உருவ கேலி குறித்து கேள்விகேட்கப்பட்டது. இது குறித்து அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:
தாயான பெண்களின் உடலைக் குறித்து யாராவது கமெண்ட் செய்தால், அது முற்றிலும் கல்வியறிவற்ற செயல். நீங்கள் தலைமுடியை வெட்டினால், அது குறையும். சுற்றுலா சென்றால் உங்களின் நிறம் மாறும். உடற்பயிற்சி செய்தால் உடல் கட்டுக்கோப்பாகும்.
நீங்கள் என்ன செய்தாலும் உடலில் பிரதிபலிக்கும். அதனைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது நமது உடலில் ஏற்படும் மாற்றத்தை ஏன் கொண்டாடுவதில்லை? உங்கள் உடலில் தோல் விரிசல் தழும்பு இருக்கிறதென கேட்பது எவ்வளவு எதிர்மறையானது.
நானாக இருந்தால், ‘குழந்தையைப் பெற்றெடுத்துள்ளீர்களா? உங்கள் குழந்தை எப்படி இருக்கிறது?’ என இப்படித்தான் கேட்டிருப்பேன்.
நான் சமூக வலைதளங்களில் குறைவான நேரமே செலவிடுவதால் யார் என்ன கேலி செய்கிறார்கள் என்பதைப் படிப்பதில்லை. என்னைப் பற்றியும் என்னைச் சுற்றிலும் நடக்கும் இந்த கேலிகள்கூட எனக்குத் தெரியாது. இதெல்லாம் முக்கியவற்றவை என நினைக்கிறேன். நேரம்தான் வீணாகும் என்றார்.
Absolutely uneducated: Parineeti on trolls targeting actresses over postpartum weight
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.