FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கல்வி

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடைபெறும் நகரம் எது என்பது குறித்த அறிவிப்பு வெளியீடு!

Updated On : 24 ஏப்ரல் 2025, 11:33 am IST
நீட் தேர்வு மையத்தில்...
பகிர்:

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நடைபெறும் நகரம் எது என்பது குறித்த அறிவிப்பு என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த நகரத்தில் தேர்வு மையம் அமையவிருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு ஏப்ரல் 23ஆம் தேதி இரவு வெளியாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் அந்த நகரத்துக்குச் செல்வது, அங்கும் வசதி ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு மாா்ச் முதல் வாரத்தில் நிறைவு பெற்ற நிலையில், தற்போது நகரத்துக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாகவே நடந்து முடிந்தது. விரைவில் அல்லது மே 1ஆம் தேதி நுழைவுச் சீட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments