FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து...

யுஜிசி - கோப்புப் படம்
பகிர்:

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஆக. 29) வெளியானது

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், அங்கு முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் இந்தத் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. மேலும், ஜூலை 6 ஆம் தேதி மறுதேர்வும் நடைபெற்று முடிந்தது.

Advertisement

Advertisement

மொத்தம் 87 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வு குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து மறுதேர்வை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மீதமுள்ள 84 பாடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மறுதேர்வு எழுதவுள்ள தேர்வர்கள், தேர்வு முடிவுககைச் சரிபார்க்கும் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்தால் அவை தவறு என்றுதான் காட்டும். எனவே, அதைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்று என்டிஏ மேலும் தெரிவித்துள்ளது.

summary

UGC NET exam results were released on Friday (Aug. 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments