முகப்பு
வினா-விடை வங்கி

வினா - விடை வங்கி.... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 4

முந்தைய ஆண்டு வினாக்கள்...

Updated On : 23 ஜூன், 2025 at 6:14 PM
பகிர்:
Updated On : 16 ஜூன், 2025 at 4:08 PM

1. கூற்று[A] : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.

காரணம் [R] : பொருளின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

(A) [A] கூற்று சரியானது, [R] காரணம் தவறானது

Advertisement

(B) [A கூற்று மற்றும் (R] காரணம் இரண்டும் தவறானது

(C) [A] கூற்று சரியானது, ஆனால் [R] காரணம் சரியான விளக்கம் அல்ல

(D) [A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]ன் சரியான விளக்கம்.

Updated On : 16 ஜூன், 2025 at 4:13 PM

2. சட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.

1. விதி 371 - மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது

2. விதி 371 A - நாகாலாந்து மாநிலம் தொடர்பானது

3. விதி 371 D - ஆந்திரபிரதேச மாநிலம் தொடர்பானது

4. விதி 371 H - தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது

(A) 2 மற்றும் 4 சரியானவை

(B) 2, 3 மற்றும் 4 சரியானவை

(C) 1 மற்றும் 4 சரியானவை

(D) 1, 2 மற்றும் 3 சரியானவை

Updated On : 16 ஜூன், 2025 at 4:16 PM

3. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக

தலைவர்

(a) காகா கலேகர் 1. பழங்குடியினர் முன்னேற்றம்

(b) சாக்சா 2. 7வது ஊதியக் குழு

(C) மண்டல் குழு 3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு

(d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர் 4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு

(a) (b) (c) (d)

(A) 1 3 4 2

(B) 4 1 3 2

(C) 1 4 3 2

(D) 3 2 4 1

Updated On : 16 ஜூன், 2025 at 4:21 PM

4. மாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன

1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்

2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்

3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்

4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்

(A) 1, 2, 3 மட்டும்

(B) 2, 3, 4 மட்டும்

(C) 1,2,4 மட்டும்

(D) 1, 3, 4 மட்டும்

Updated On : 16 ஜூன், 2025 at 4:28 PM

5. பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.

1. வைக்கம் சத்தியாகிரகம்

2. ஒத்துழையாமை இயக்கம்

3. கள்ளுக்கடை மறியல்

4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்

(A) 2, 3, 4, 1

(B) 2, 4, 3, 1

(C) 2, 1, 3, 4

(D) 4, 2, 3, 1

Updated On : 16 ஜூன், 2025 at 4:30 PM

6. கால வரிசைப்படி சரியானவற்றை தேர்ந்தெடுக்க/முறைப்படுத்துக:

(A) இராஜாதிராஜன் I, பராந்தகன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன்

(B) குலோத்துங்கன் I, பராந்தகன் I, இராஜாதிராஜன் I, இராஜாதித்தியா I

(C) பராந்தகன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I

(D) பராந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I

Updated On : 16 ஜூன், 2025 at 4:32 PM

7. வடநூலாரின் 'தத்துவ ஞானம்' என்னும் கருத்தை முன்னிறுத்தும் திருக்குறளின் அதிகாரத்தைக் கண்டறிக.

(A) கொல்லாமை

(B) நிலையாமை

(C) துறவு

(D) மெய்உணர்தல்

Updated On : 16 ஜூன், 2025 at 4:33 PM

8. பின்வரும் பட்டங்களில் பாண்டிய மன்னர்களுடன் தொடர்புடையது எது?

(i) மீனவர்

(ii) வில்லவர்

(iii) குடவர்

(iv) பஞ்சவர்

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (i) மற்றும் (iv) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

Updated On : 16 ஜூன், 2025 at 4:35 PM

9. "தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” எனப் பாடியவர் யார்?

(A) திருஞான சம்பந்தர்

(B) திருநாவுக்கரசர்

(C) சுந்தரர்

(D) மாணிக்கவாசகர்

Updated On : 16 ஜூன், 2025 at 4:36 PM

10. எந்த தமிழ் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?

(A) பாரதிதாசன்

(B) பாரதியார்

(C) சுதானந்த பாரதி

(D) கவிமணி

Updated On : 16 ஜூன், 2025 at 4:38 PM

11. ராஷ்டிரகூடர்களின் தேசிய சின்னம் என்ன?

(A) சிங்கம்

(B) தங்க கழுகு

(C) புலி

(D) யானை

Updated On : 16 ஜூன், 2025 at 4:39 PM

12. கீழ்க்காண்பவற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?

(A) பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்

(B) சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்

(C) ஐயத்தின் நீங்கித் தெளிதல்

(D) சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது

Updated On : 16 ஜூன், 2025 at 4:41 PM

13. "வேந்தர்க்கு ஒளியாவது" என்று திருக்குறள் எதனைக் கூறுகின்றது?

(i) கொடை

(ii) அளி

(iii) செங்கோல் குடியோம்பல்

(A) (i) மட்டும்

(B) (i), (iii) மட்டும்

(C) (i), (ii) மட்டும்

(D) (i), (ii) மற்றும் (iii)

Updated On : 16 ஜூன், 2025 at 4:43 PM

14. பொருத்துக

(a) தாருகன் 1. தேர்ச்சக்கரம்

(b) ஆழி 2. அரக்கன்

(C) நற்றிறம் 3. தேவர்

(d) இமையவர் 4. அறநெறி

Updated On : 16 ஜூன், 2025 at 9:37 PM

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 2 1 4 3

(C) 3 1 2 4

(D) 4 3 2 1

Updated On : 16 ஜூன், 2025 at 9:42 PM

15. பின்வரும் கல்வெட்டுகளில் எந்தக் கல்வெட்டில் 'மதுரா' என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது?

(a) சித்தர்மலை கல்வெட்டு

(b) அழகர்மலை கல்வெட்டு

(c) மாமண்டூர் கல்வெட்டு

(d) பாத்திபுரலு கல்வெட்டு

(A) (a) மற்றும் (b) மட்டும்

(B) (a) மற்றும் (c) மட்டும்

(C) (b) மற்றும் (d) மட்டும்

(D) (c) மற்றும் (d) மட்டும்

Updated On : 22 ஜூன், 2025 at 9:42 PM

16. அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக:

(a) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி 1. ரோமானிய மட்பாண்டங்கள்

(b) கீழையூர் அகழ்வாராய்ச்சி 2. புத்த மத மையம்

(c) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி 3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு

(d) உறையூர் அகழ்வாராய்ச்சி 4. காவேரியின் கலாச்சாரம்

(a) (b) (c) (d)

(A) 1 2 4 3

(B) 3 4 2 1

(C) 4 3 1 2

(D) 2 3 1 4

Updated On : 22 ஜூன், 2025 at 9:49 PM

17. "தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்;

தருமம் மறுபடி வெல்லும்"

- பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இதனைச் சொல்பவர் யார்?

(A) பாஞ்சாலி

(B) கண்ணன்

(C) அர்ச்சுனன்

(D) தருமன்

Updated On : 22 ஜூன், 2025 at 9:50 PM

18. பின்வரும் தொடரைப் படித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

(i) நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவான வியத்தகு அமைப்பு இசைத்தூண்கள் ஆகும்.

(ii) கல்லால் இசையை எழுப்பும் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு, பன்னாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.

(iii) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல சிறு தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சிறு தூணும் இசை ஒலி எழுப்புவதைக் காணலாம்.

(iv) இராமேஸ்வரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தூண்களில் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்.

(A) (i), (ii) ஆகியவை மட்டும் சரி

(B) (i), (ii), (iii) ஆகியவை மட்டும் சரி

(C) (i), (ii), (iii), (iv) ஆகியவை மட்டும் சரி

(D) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை மட்டும் சரி

Updated On : 22 ஜூன், 2025 at 9:52 PM

19. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் சோழர்கள் பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக.

(i) அசோக கல்வெட்டில் சோழர்கள் பற்றி முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(ii) தமிழகத்தில் சுதந்திர அரசாக அவர்கள் விளங்கினர்.

(iii) கன்னியாகுமரி கல்வெட்டுகள் மற்றும் அன்பில் சாசனமும் சோழர்கள் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.

(A) (i) மட்டும் சரியானது

(B) (i) மற்றும் (ii) மட்டும் சரியானது

(C) (i), (ii) மற்றும் (iii) சரியானது

(D) (i) மற்றும் (iii) சரியானது

Updated On : 22 ஜூன், 2025 at 9:54 PM

20. ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையல்ல?

1. ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்கிறார்கள்.

2. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு முடிவும் கலந்து கொள்ளும் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத கூட்டத்தால் எடுக்கப்படும்.

3. ஜிஎஸ்டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி பேர் அதன் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபரே பங்கு பெறுவர்.

(A) 1 மற்றும் 2

(B) 2 மற்றும் 3

(C) 1 மற்றும் 3

(D) 1, 2 மற்றும் 3

Updated On : 22 ஜூன், 2025 at 9:56 PM

21. 'PURA' என்னும் சொல்லின் சரியான விரிவாக்கத்தைத் தேர்ந்தெடுக்க.

(A) சரியான பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்

(B) கிராமப் பகுதிகளில் வழக்கமான வசதிகள் வழங்குதல்

(C) மண்டலப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்

(D) கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்

Updated On : 22 ஜூன், 2025 at 9:57 PM

22. கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?

(1) தொழில் உரிமம்

(2) அயல்நாட்டு முதலீடு

(3) அயல்நாட்டு வாணிபக் கொள்கை

(4) பொது துறை நிர்வாகம்

(A) (1) மற்றும் (4) மட்டும்

(B) (2) மற்றும் (3) மட்டும்

(C) (1), (2) மற்றும் (4) மட்டும்

(D) (1) (2) (3) மற்றும் (4)

Updated On : 22 ஜூன், 2025 at 9:59 PM

23. இந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.

(i) பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.

(ii) தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.

(iii) தலா வருமானத்தை அதிகரிக்க

(iv) மலிவுப் பணக்கொள்கைக்காக

குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க.

(A) (i) மற்றும் (iii) சரியானவை

(B) (i) மற்றும் (ii) சரியானவை

(C) (ii) மற்றும் (iii) சரியானவை

(D) (iii) மற்றும் (iv) சரியானவை

Updated On : 22 ஜூன், 2025 at 10:01 PM

24. கீழ்க்காண்பனவற்றுள் எது போஷன் 2.0 திட்டத்தில் கூறப்படாதது?

(A) குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

(B) பதின்ம வயது பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு

(C) கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

(D) வயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு

Updated On : 22 ஜூன், 2025 at 10:01 PM

25. பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?

1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.

2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO)-வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.

(A) 1 மற்றும் 2 மட்டும்

(B) 1 மற்றும் 3 மட்டும்

(C) 2 மற்றும் 3 மட்டும்

(D) 1, 2 மற்றும் 3

Updated On : 22 ஜூன், 2025 at 10:01 PM

விடைகள்

1. (D) [A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]ன் சரியான விளக்கம்.

2. (D) 1, 2 மற்றும் 3 சரியானவை

3. (B) 4 1 3 2

4. (C) 1,2,4 மட்டும்

5. (A) 2, 3, 4, 1

6. (D) பராந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I

7. (D) மெய்உணர்தல்

8. (C) (i) மற்றும் (iv) மட்டும்

9. (B) திருநாவுக்கரசர்

10. (B) பாரதியார்

11. (B) தங்க கழுகு

12. (A) பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்

13. (D) (i), (ii) மற்றும் (iii)

14. (B) 2 1 4 3

15. (A) (a) மற்றும் (b) மட்டும்

16. (A) 1 2 4 3

17. (C) அர்ச்சுனன்

18. (B) (i), (ii), (iii) ஆகியவை மட்டும் சரி

19. (C) (i), (ii) மற்றும் (iii) சரியானது

20. (C) 1 மற்றும் 3

21. (D) கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்

22. (C) (1), (2) மற்றும் (4) மட்டும்

23. (B) (i) மற்றும் (ii) சரியானவை

24. (D) வயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு

25. (D) 1, 2 மற்றும் 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.