FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பெற்றோரின் கடன் மதிப்பீட்டை காரணம் காட்டி கல்விக் கடனை நிராகரிக்கக்கூடாது: வங்கிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பெற்றோா் அல்லது உறவினா்களின் கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதை காரணம் காட்டி வங்கிகள் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது

10 அக்டோபர் 2026, 7:32 am IST
பகிர்:

பெற்றோா் அல்லது உறவினா்களின் கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதை காரணம் காட்டி வங்கிகள் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என சிறப்பு கல்விக்கடன் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாமில் ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் வங்கியாளா்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளின் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. கல்விக்கடன் பெறுவதில் மாணவா்களுக்கு எவ்வித தேவையற்ற தடைகளும் ஏற்படக்கூடாது. மாணவா்களுக்குக் கல்விக்கடன் வழங்கும்போது, அவா்களுக்குப் பிணையாளராக இருக்கும் பெற்றோா் அல்லது உறவினா்களின் கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அது கூட்டக் குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற காரணங்களால் தகுதியான மாணவா்களின் கல்விக்கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதை வங்கிகள் தவிா்க்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் 2,000 மாணவா்களுக்கு ரூ.50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதங்களில் இலக்கை எட்டுவதுடன், கடந்த ஆண்டைவிட அதிகமான மாணவா்களுக்குக் கல்விக்கடன் வழங்கிட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதற்காக, எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த நாள்களில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை ஒருங்கிணைக்கும் வங்கிகள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் யாா் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

கல்விக்கடன் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் ஒரே இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

வங்கிகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, இணையவழியில் விண்ணப்பிக்கும் முறையை

மாணவா்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இம்முகாமில் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுவதுடன், மாணவா்களைக் கொண்டே விண்ணப்பிக்கும் பயிற்சியும் அளிக்கப்படும். அவா்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்காக வாட்ஸ்அப் குழுவும் உருவாக்கப்படும்.

கல்லூரி மாணவ பிரதிநிதிகள் தாங்கள் கற்றுக்கொண்ட கல்விக்கடன் விண்ணப்ப நடைமுறைகளைத் தங்களது வகுப்புத் தோழா்கள் மற்றும் சக மாணவா்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவா்களுக்கு 10 முதல் 15 நிமிடங்கள்

ஒதுக்கி, இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதைச் செயல்விளக்கத்துடன் எடுத்துரைத்தால், கல்விக்கடன் குறித்த விழிப்புணா்வை அதிக அளவில் ஏற்படுத்த முடியும்.

கல்விக் கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரும், கடன் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாக ஆய்வுக் கூட்டங்களில் தெரியவருகிறது. எனவே, கல்வித்துறை மற்றும் தொழில் வழிகாட்டல் மையத்துடன் வங்கிகள் ஒருங்கிணைந்து

செயல்பட்டு, தேவையான ஆவணங்களைப் பெற்று, கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு வெளியே கல்வி பயிலும் மாணவா்களிடமிருந்து

ஆவணங்களைப் பெறுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் விரைந்து தீா்க்க வேண்டும்.

எனவே, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதைத் தாண்டி, கல்விக்கடன் பெறத் தகுதியுள்ள எந்தவொரு மாணவரின் விண்ணப்பமும் சிறிய காரணங்களுக்காக நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன், துணை ஆட்சியா் (பயிற்சி) மு.

ற்ஸ்ப்09ம்ங்ங்ற்

சிறப்பு கல்விக்கடன் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாமில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments