இந்திய தேசிய இயக்கம்: வினா - விடைகள்! - 1
இந்திய தேசிய இயக்கம் தொடர்பான வினா - விடைகள்...
1. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் 1885 ஆம் ஆண்டு எங்கு நடைபெற்றது?
அ) சென்னை
ஆ) தில்லி
இ) பம்பாய்
ஈ) கல்கத்தா
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
அ) ஏ.ஓ. ஹியூம்
ஆ) டபிள்யூ. சி. பானர்ஜி
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பக்ருதீன் தியாப்ஜி
3. 'இந்தியாவின் முதுபெரும் மனிதர்' என்று போற்றப்படுபவர் யார்?
அ) பால கங்காதர திலகர்
ஆ) கோபால கிருஷ்ண கோகலே
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) மகாத்மா காந்தி
4. 'செல்வச் சுரண்டல் கோட்பாட்டை' முன்வைத்தவர் யார்?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) தாதாபாய் நௌரோஜி
இ) ரமேஷ் சுந்தர் தத்
ஈ) எம்.ஜி. ரானடே
5. வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு?
அ) 1904
ஆ) 1905
இ) 1906
ஈ) 1911
6. வங்கப் பிரிவினையை அறிவித்த வைசிராய் யார்?
அ) ரிப்பன் பிரபு
ஆ) லிட்டன் பிரபு
இ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஈ) கர்சன் பிரபு
7. சுதேசி இயக்கம் எப்போது அறிவிக்கப்பட்டது?
அ) ஜனவரி 1, 1905
ஆ) ஆகஸ்ட் 7, 1905
இ) அக்டோபர் 16, 1905
ஈ) டிசம்பர் 31, 1905
8. காங்கிரஸில் 'சூரத் பிளவு' ஏற்பட்ட ஆண்டு?
அ) 1905
ஆ) 1906
இ) 1907
ஈ) 1916
9. மிதவாதிகளையும் தீவிரவாதிகளையும் மீண்டும் இணைத்த உடன்படிக்கை?
அ) பூனா ஒப்பந்தம்
ஆ) காந்தி - இர்வின் ஒப்பந்தம்
இ) லக்னௌ ஒப்பந்தம் (1916)
ஈ) சிம்லா ஒப்பந்தம்
10. சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் யார்?
அ) பால கங்காதர திலகர்
ஆ) அன்னி பெசன்ட்
இ) சரோஜினி நாயுடு
ஈ) ஜி.எஸ். அருண்டேல்
11. பால கங்காதர திலகர் தன்னாட்சி இயக்கத்தை எங்கு தொடங்கினார்?
அ) சென்னை
ஆ) பெல்காம்
இ) வாரணாசி
ஈ) கல்கத்தா
12. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) திராவிடர் கழகம்
ஆ) நீதிக் கட்சி
இ) சுயராஜ்யக் கட்சி
ஈ) மக்கள் கட்சி
13. நீதிக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1912
ஆ) 1914
இ) 1916
ஈ) 1920
14. இந்தியாவில் எதன் ஒரு பகுதியாக கிலாபத் இயக்கம் உருவானது?
அ) வஹ்ஹாபி இயக்கம்
ஆ) பான்-இஸ்லாமிய இயக்கம்
இ) ஒத்துழையாமை இயக்கம்
ஈ) அலிஹார் இயக்கம்
15. இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான 'சென்னை தொழிலாளர் சங்கம்' தொடங்கப்பட்ட ஆண்டு?
அ) 1914
ஆ) 1917
இ) 1918
ஈ) 1920
16. பி.பி. வாடியா எந்தச் சங்கத்தைத் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றினார்?
அ) அகமதாபாத் மில் தொழிலாளர் சங்கம்
ஆ) சென்னை தொழிலாளர் சங்கம்
இ) இந்தியத் தொழிலாளர் சம்மேளனம்
ஈ) கிசான் சபா
17. 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்' என முழங்கியவர்?
அ) விபின் சந்திர பால்
ஆ) லாலா லஜபதி ராய்
இ) பால கங்காதர திலகர்
ஈ) சுபாஷ் சந்திர போஸ்
18. வ.உ. சிதம்பரனார் ‘சுதேசி நாவாய் சங்கத்தை’ நிறுவிய ஆண்டு?
அ) 1905
ஆ) 1906
இ) 1907
ஈ) 1908
19. திருநெல்வேலியில் நடந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் யார்?
அ) வ.உ.சி மற்றும் பாரதியார்
ஆ) வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா
இ) வாஞ்சிநாதன் மற்றும் நீலகண்ட பிரம்மச்சாரி
ஈ) ராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தி
20. 1911 ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்றவர் யார்?
அ) திருப்பூர் குமரன்
ஆ) வாஞ்சிநாதன்
இ) செண்பகராமன்
ஈ) பகத் சிங்
21. 'பாரத மாதா சங்கத்தை' நிறுவியவர் யார்?
அ) வ.உ.சி
ஆ) பாரதியார்
இ) நீலகண்ட பிரம்மச்சாரி
ஈ) சுப்பிரமணிய சிவா
22. நியூ இந்தியா, காமன்வீல் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?
அ) அன்னி பெசன்ட்
ஆ) திலகர்
இ) காந்தி
ஈ) பெரியார்
23. இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதப் போக்கைக் கடைபிடித்த முக்கியத் தலைவர் யார்?
அ) பிபின் சந்திர பால்
ஆ) கோபால கிருஷ்ண கோகலே
இ) லாலா லஜபதி ராய்
ஈ) அரவிந்த கோஷ்
24. தீவிரவாதப் போக்கைக் கொண்ட லால்-பால்-பால் குழுவில் இடம்பெறாதவர் யார்?
அ) லாலா லஜபதி ராய்
ஆ) பால கங்காதர திலகர்
இ) பிபின் சந்திர பால்
ஈ) கோபால கிருஷ்ண கோகலே
25. முஸ்லிம் லீக் 1906-இல் எங்கு தோற்றுவிக்கப்பட்டது?
அ) லாகூர்
ஆ) அலிஹார்
இ) டாக்கா
ஈ) லக்னௌ
விடைகள்
இ) பம்பாய்
ஆ) டபிள்யூ. சி. பானர்ஜி
இ) தாதாபாய் நௌரோஜி
ஆ) தாதாபாய் நௌரோஜி
ஆ) 1905
ஈ) கர்சன் பிரபு
ஆ) ஆகஸ்ட் 7, 1905
இ) 1907
இ) லக்னோ ஒப்பந்தம் (1916)
ஆ) அன்னி பெசன்ட்
ஆ) பெல்காம்
ஆ) நீதிக் கட்சி
இ) 1916
ஆ) பான்-இஸ்லாமிய இயக்கம்
இ) 1918
ஆ) சென்னை தொழிலாளர் சங்கம்
இ) பால கங்காதர திலகர்
ஆ) 1906
ஆ) வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா
ஆ) வாஞ்சிநாதன்
இ) நீலகண்ட பிரம்மச்சாரி
அ) அன்னி பெசன்ட்
ஆ) கோபால கிருஷ்ண கோகலே
ஈ) கோபால கிருஷ்ண கோகலே
இ) டாக்கா