முகப்பு
தேர்தல் செய்திகள்

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டி.

Updated On : 2 மே 2024, 9:05 am IST
பகிர்:

ஒடிஸா மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததார்.

Advertisement

Advertisement

ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், கல்பனா முதல்வராவார் என்று கூறப்பட்ட நிலையில் சாம்பாய் சோரன் பதவியேற்றார்.

இந்நிலையில், முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் ஹேம்ந்த் சோரனின் அண்ணியும் ஜார்கண்ட் சட்டப்பேரவை உறுப்பினருமான சீதா சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments