பெரும்பான்மையை நெருங்கும் தவெக; 2-வது இடத்தில் அதிமுக!
தமிழகம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையை நெருங்கும் தவெக குறித்து...
தமிழகம் சட்டப்பேரவை தேர்தல் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை (மே 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் முடிவுகளை, ‘இசிஐநெட்’ செல்போன் செயலி வாயிலாக உடனுக்குடன் மக்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
காலை 8 மணிக்கு முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சுற்றுகள் வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தற்போதைய நிலவரப்படி, தவெக 104, அதிமுக 61, திமுக 47, பாமக 5, காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ஆவது இடத்திலும், ஆளும் திமுக 3-ஆவது இடத்திலும் இருந்து வருகிறது.
பெரும்பான்மையை தவெக நெருங்கும் நிலையில், அதிமுக இரண்டாவது இடத்திலும், திமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
திமுகவின் படுதோல்வி நிலவரம் அந்த கட்சிக்கும், அதன் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 30 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 22 இடங்களிலும், இந்தியா கூட்டணி 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
The counting of votes for the Tamil Nadu Assembly elections is underway, starting at 8 am on Monday (May 4).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.