விவசாயத்துறை பட்டதாரிகளா நீங்கள்..? உங்களுக்கு தமிழக அரசில் விவசாய அதிகாரி வேலை
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Agricultural Officer (Extension)
காலியிடங்கள்: 192
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
தகுதி: விவசாயத் துறையில் பி.எஸ்சி பட்டம் மற்றும் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2018
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பி்க்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2018_09_AO_EXTENSION.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.