பொதுத்துறை நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
பொதுத் துறை நிறுவனமான THDCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனமான THDCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.09/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Engineer Trainee -Civil
காலியிடங்கள்: 20
Advertisement
Advertisement
பணி: Engineer Trainee - Electrical
காலியிடங்கள்: 15
பணி: Engineer Trainee - Mechanical
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2022
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.