FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

உதவித்தொகையுடன் இந்தியன் வங்கியில் தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூலை 2024, 3:31 pm IST
இந்தியன் வங்கி
பகிர்:

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Apprenticeship

காலியிடங்கள்: 1500

Advertisement

Advertisement

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.12,000 - 15,000

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தங்களது கல்வித் தகுதி குறித்த விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments