ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள திறன் உதவியாளர் பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள திறன் உதவியாளர் (Skilled Assistant) பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 08/MRB/2025, 09/MRB/2025,
பணி: Skilled Assistant(Welder Grade-II)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 1(எஸ்டி)
பணி: Skilled Assistant Grade-II (Fitter Grade-II)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர், மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பிரிவில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் கல்வித் தகுதி 11.6.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.7.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.