FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள 'ஸ்கேஃபோல்டர் டிரெய்னி' பணியிடங்கள் தொடர்பாக...

Updated On : 18 ஜூலை 2026, 2:12 pm IST
கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம். - cochinshipyard
பகிர்:

இந்திய அரசின் பட்டியலிடப்பட்ட முன்னணி 'மினி ரத்னா' நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள 'ஸ்கேஃபோல்டர் டிரெய்னி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 முடித்த ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்கள் பார்ப்போம்...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CSL/P&A/RECTT/CON-TRACT/Scaffolder Trainee/2026-27

Advertisement

Advertisement

பணி: ScaffoIder Trainee

காலியிடங்கள்: 60

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 20,100

வயதுவரம்பு: 22.07.2026 தேதியின்படி 23-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாதம் Scaffolder பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது உதவித் தொகை மாதம் ரூ.10,000 வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் பணி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

CSL invites Online Applications from Indian citizens fulfilling the eligibility requirements, for filling up of the following seats of Scaffolder Trainee ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments