FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் இந்தியா-வில் அதிகாரி பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

முன்னணி பொதுத்துறை வங்கியான 'பேங்க் ஆஃப் இந்தியா'-ல் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Updated On : 20 ஜூலை 2026, 3:12 pm IST
பேங்க் ஆஃப் இந்தியா-வில் அதிகாரி பணி - Bank of India
பகிர்:

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான 'பேங்க் ஆஃப் இந்தியா'-ல் பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து இன்றைக்குள்(ஜூலை 20) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Project No.: 2026-27/01

பணி: Credit Officer

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 779

சம்பளம்: கிரேடு-II பணிக்கு மாதம் ரூ..64,820 - 93,960, கிரேடு-II பணிக்கு ரூ..85,920 - 1,05,280, கிரேடு -IV பணிக்கு ரூ.1,02,300 -1,20,940. வழங்கப்படும்.

தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி, வங்கியல் துறையில் எம்பிஏ அல்லது வணிகவியல், சந்தையியல், மேலாண்மை பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளில் கிரேடு-II பணிக்கு 3 ஆண்டுகளும், கிரேடு-III பணிக்கு 5 ஆண்டுகளும், கிரேடு- IV பணிக்கு 7 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.

வயது வரம்பு: 1.6.2026 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்ப வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், துறைசார்ந்த அறிவு குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு ரூ.175, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

BANK OF INDIA, a leading Public Sector Bank having Head Office in Mumbai,invites applications for recruitment of Officers as mentioned...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments