FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு! தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை!

ஆந்திரத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி நியமன வேலைவாய்ப்பு குறித்து....

Updated On : 26 ஜூலை 2026, 3:04 pm IST
தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை - NID
பகிர்:

ஆந்திரத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி நியமன வேலைவாய்ப்புக்கான ஒரு பெரிய அளவிலான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்' கீழ் ஆந்திரத்தில் நிறுவப்பட்டது தேசிய வடிவமைப்பு நிறுவனம். இந்த நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தன்னாட்சி பெற்ற மற்றும் பல்துறை சார்ந்த வடிவமைப்பு நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் நேரடி நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பணி, காலியிடங்கள் மற்றும் இதர விவரங்கள்...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NID AP/RECT./2026/R-1

பணி: முதன்மை வடிவமைப்பாளர்(Principal Designer) - 13

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் வடிவமைப்புக் கலையில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். வடிவமைப்புக் கலையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வடிவமைப்புத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆசிரியர்(Faculty) - 10

தகுதி: வடிவமைப்புக் கலையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் அல்லது டிப்ளோமா முடித்திருப்பதுடன் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மூத்த கணக்கு அதிகாரி(Senior Accounts Officer) -10

தகுதி: வணிகவியல் அல்லது நிதி மேலாண்மையில் முதுகலைப் பட்டம் அல்லது சிஏ அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பதுடன் அரசு,கல்வி,ஆராய்ச்சி நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம்; நிதி மற்றும் கணக்கு நடைமுறைகள் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசால் நிதியளிக்கப்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் அனுபவம், துறைசார் கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல், இந்திய அரசின் முறைப்படுத்தப்பட்ட கணக்குத் துறைப் பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் விரும்பத்தக்கது.

பணி: மூத்த உதவி நூலகர்(Senior Assistant Librarian) - 7

தகுதி: நூலக அறிவியல், தகவல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நூலகத் தானியக்கம் மற்றும் நிர்வாகத்தில் அனுபவம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் உதவி நூலகராக ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம், நூலக நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியல், தகவல் அறிவியல் மற்றும் ஆவணப்படுத்தலில் எம்.ஃபில், முனைவர் பட்டம் மற்றும் கணினி பிரிவில் பட்டம், பட்டயம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: உதவியாளர்(Assistant) - 4

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவது குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: இணை மூத்த தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர்(Associate Sr. Technical Instructor) - 7

தகுதி: மெக்கானிக்கல், தொழில்துறை, உற்பத்திப் பொறியியல் (அல்லது) தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது 10-ஆம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டு காலப் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் அல்லது தொழில்துறையில் பட்டதாரிகள் நான்கு ஆண்டுகள், டிப்ளமோ முடித்தவர்கள் ஆறு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருளைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: இணை மூத்த வடிவமைப்பு பயிற்றுவிப்பாளர்(Associate Sr. Design Instructor)- 7

தகுதி: ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு (Textile & Apparel Design)

ஃபேஷன் வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தித் தொழில்நுட்பம், பேட்டர்ன் மேக்கிங் மற்றும் ஆடை உருவாக்கம் (அல்லது) தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ(பட்டயம்) முடித்து, கல்வி நிறுவனம் அல்லது தொழில்துறையில் ஃபேஷன் வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தித் தொழில்நுட்பம், பேட்டர்ன் மேக்கிங் மற்றும் ஆடை உருவாக்கம் அல்லது தொடர்புடைய துறையில் பட்டதாரிகள் நான் ஆண்டுகளும், பட்டயம் முடித்தவர்கள் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருளைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது

தொழில்துறை வடிவமைப்பு (Industrial Design)

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், தொழில்துறை, மின்னணுவியல், மெகாட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனம் அல்லது தொழில்துறையில் பட்டதாரிகளுக்கு நான்கு ஆண்டுகளும், டிப்ளமோ முடித்தவர்கள் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருட்களைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தகவல் தொடர்பு வடிவமைப்பு (Communication Design)

தகவல் தொடர்பு வடிவமைப்பு, அனிமேஷன், மோஷன் கிராபிக்ஸ், டிஜிட்டல் மீடியா, கேம் வடிவமைப்பு, கிராஃபிக் வடிவமைப்பு (அல்லது) தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் பட்டதாரிதள் கல்வி நிறுவனம் அல்லது தொழில்துறையில் நான்கு ஆண்டுகளும், டிப்ளமோ முடித்தவர்கள் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருட்களைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: வடிவமைப்பு பயிற்றுவிப்பாளர்(Design Instructor)- 6

தகுதி: தொடர்பு வடிவமைப்பு

தொடர்பு வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, புதிய ஊடகம், விளையாட்டு வடிவமைப்பு, யுஐ, யுஎக்ஸ் வடிவமைப்பு மல்டிமீடியா (அல்லது) தொடர்புடைய பாடத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம். அல்லது சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம்பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருட்களைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர் (Technical Instructor) - 6

தகுதி: தகவல் தொடர்பு வடிவமைப்பு (Communication Design)

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தகவல் தொடர்பு வடிவமைப்பு, புகைப்படக்கலை, திரைப்படத் தயாரிப்பு, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, ஆடியோ இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளோமா படிப்புடன், கல்வி நிறுவனம் அல்லது தொழில் துறையில் 4 ஆண்டுகள் பணி அனுபவம். (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் அது சார்ந்த துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருட்களைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு (Textile & Apparel Design)

கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் அல்லது அது சார்ந்த பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளோமா படிப்புடன், கல்வி நிறுவனம் அல்லது தொழில் துறையில் கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் அல்லது அது சார்ந்த துறையில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் அல்லது அது சார்ந்த பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் கல்வி நிறுவனம் அல்லது தொழில் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மற்றும் தொடர்புடைய மென்பொருட்களைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: தொழில்நுட்ப உதவியாளர்(Technical Assistant)- 5

தொழில்துறை வடிவமைப்பு

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கலை மற்றும் கைவினை அல்லது அது சார்ந்த துறையில் 1 ஆண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் கல்வி நிறுவனம் அல்லது அது சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கலை மற்றும் கைவினை அல்லது அது சார்ந்த துறையில் 3 ஆண்டு டிப்ளோமா மற்றும் கல்வி நிறுவனம் அல்லது தொழில் துறையில் கலை மற்றும் கைவினை அல்லது அது சார்ந்த துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், உலோகம், மரம், பிளாஸ்டிக், மட்பாண்டம், மூங்கில் போன்ற மூலப்பொருட்கள் மற்றும் வர்ணம் பூசுதல், மேற்பூச்சு குறித்த அடிப்படை அறிவு மற்றும் அடிப்படை இயந்திரங்கள் மற்றும் மின்சாரக் கருவிகளைக் கையாள்வதிலும் பராமரிப்பதிலும் நிபுணத்துவம். இந்தியக் கைவினைத் தொழில் குறித்த அறிமுகம் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு

கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய துறையில் 1 ஆண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் கல்வி நிறுவனம், தொழில்துறையில் கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் கல்வி நிறுவனம், தொழில்துறையில் கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பருத்தி, பட்டு போன்ற பொருள்களில் லேட்டிஸ், ஜக்கார்டு இணைப்பில் ஜரியுடன் கைத்தறி நெசவு நுட்பங்களில் நிபுணத்துவம். இரண்டுக்கும் மேற்பட்ட ஷாஃப்ட்கள் மற்றும் டை அப்கள், ப்ரீலூம், ஆன்-லூம், போஸ்ட்-லூம் செயல்முறைகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மாதிரி தயாரிப்பிற்காக டேபிள்டாப் தறிகளைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.7.202 தேதியின்படி 18 முதல் 35, 55-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை: www.nid.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The National Institute of Design, Andhra Pradesh is an autonomous multi-disciplinary design Institute of National Importance established under the Department for Promotion of Industry and Internal Trade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments