FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

நபார்டு வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

Updated On : 1 ஜூன் 2026, 12:54 pm IST
நபார்டு வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணி - NABARD
பகிர்:

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்றைக்குள்( ஜூன் 1) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

அறிவிப்பு எண்.: 01

Advertisement

Advertisement

பணி: Specialist

பணி: Finance Strategy - 1

தகுதி: மேலாண்மை, வணிக நிர்வாகவியல், எம்எம்எஸ் போன்ற ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Information Techno-logy Strategy - 1

தகுதி: கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Human Resource Strategy - 1

தகுதி: மனிதவள மேலாண்மை, மனிதவளம், தொழிலக உறவுகள் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Organization Strategy - 2

தகுதி: பொதுக் கொள்கை, உத்திசார் மேலாண்மை பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 24 - 45 லட்சம்

வயது வரம்பு: 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Climate Finance Specialist

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ. 4 லட்சம்

வயதுவரம்பு: 65-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண் கள் பெற்று முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Additional Chief Risk Manager

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 3.85 லட்சம்

வயது வரம்பு: 40 முதல் 62-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், நிதி, வணிக நிர்வாகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது மேலாண்மையில் முதுகலை பட்டம், எம்பிஏ, பிஜிடிஎம் அல்லது

பணி: Risk Manager - Market Risk

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 3 லட்சம்

வயது வரம்பு: 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நிதி, வணிகவியல், பொருளியல், புள்ளியியல், பொருளியல் அளவியல், கணிதம், கணிதப் புள்ளியியல், பிஜிடிபிஏ, பிஜிபிஎம், பிஜிடிஎம் ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.150. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.6.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

NABARD BANK Recruitment of Specialists on Contract...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments