பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் குறித்து...
'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமும், நாட்டின் முதன்மையான தொழில்முறை மின்னணு நிறுவனமுமான 'பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் பெங்களூரு, வேலூர், பலசமுத்திரம், காஜியாபாத், ஹைதராபாத் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிளைகளில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 383/ HR/Asst.Sec. Off/25-26
Advertisement
Advertisement
பணி: Assistant Security Officer
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.30,000 -1,20,000
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்து ராணுவம், கடற்படை,விமானப்படை, மத்திய துணை ராணுவ அமைப்புகளில் ஜேசிஒ தரநிலையில் அதி ரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத் துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Bharat Electronics Limited, a Navaratna Company and India‟s premier Professional Electronics Company requires Security Officers on permanent basis for its Units...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.