மத்திய நவீன ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
பொதுத்துறை நிறுவனம் நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 'அட்டவணை ஏ' வகையைச் சேர்ந்த ஒரு பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனம் "நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம்".
கான்பூரில் தலைமையகமாகக் கொண்டு 2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் அறிவிப்பின்படி, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தனது வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கியது. முக்கியமாக ஆயுத அமைப்புகள், சிறு ரக ஆயுதங்கள், பீரங்கி துப்பாக்கி உதிரிபாகங்கள் மற்றும் வெடிமருந்து உதிரிபாகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது; மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எட்டு உற்பத்தி பிரிவுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்வரும் பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
பணி: Junior Executive (HR)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.ரூ.60,000
தகுதி: HR,Personnel,IR,PM பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Legal Expert
காலியிடம்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.90,000
தகுதி: சட்டப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்ரிருப்பதுடன் அதனை பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
பணி: SR Manager - IT
காலியிடம்: 1 (UR)
சம்பளம் : மாதம் ரூ.1,10,000
வயது வரம்பு: 45-க்குள் இருக்கவேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கனிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்(Computer,Information Technology) பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.aweil.in அல்லது www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director (HR), Advanced Weapons and Equipment India Limited, Ordnance Factory, Kanpur Premises, Kalpi Road, Kanpur, U.P. 208 009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.6.2026
விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
AWEIL invites applications from Indian nationals fulfilling the following eligibility criteria for the following post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.