முகப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடலூர் மாவட்ட அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணி

கடலூர் மாவட்டத்தில் உள்ள அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் செவிலியா் பணி விண்ணப்பிப்பது குறித்து...

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடலூர் மாவட்ட அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணி
கடலூர் மாவட்ட அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணி - கோப்புப்படம்
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் இயக்குநர் மருத்துவர் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் (CEmONC)ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

செவிலியா்கள் பதவிக்கு, 50 வயதிற்குள்பட்ட, செவிலியா் பட்டயப் படிப்பு(ஜிஎன்எம்) அல்லது இளங்கலை செவிலியா் பட்டம்(பி.எஸ்சி. நர்சிங்), அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரி- இந்திய செவிலியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணிக்கு தேவையான தமிழ்மொழி புலமை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,000 வழங்கப்படும்.

முற்றிலும் தற்காலிகமான பணி என்பதால் எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்ய இயலாது. மேலும் எந்த நேரத்திலும் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை https://cuddalore.nic.in என்ற வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலரம், 05 பீச் ரோடு, கடலூர்-607001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை நேரிலோ, விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம். மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் 4.12.2026 மாலை 5 மணிக்குள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

National Health Mission TamilNadu Application for the post of Contractual,Temporary Staff Nurse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.