முகப்பு
அரசுப் பணிகள்

இந்திய அஞ்சல் துறையில் 60 ஆயிரம் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு?

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட்மேன், மெயில்கார்டு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Updated On : 7 டிசம்பர் 2022, 2:33 pm IST
பகிர்:

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட்மேன், மெயில்கார்டு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை போஸ்ட்மேன், மெயில்கார்டு பதவிகளுக்கான வரைவு ஆள்சேர்ப்புக்கான விதிமுறைகளை அஞ்சல் துறை வெளியிட்டது. அதில், பணி, பணியிடம், பணியின் வகைப்பாடு, சம்பளம், பணி நிபந்தனை காலம், தகுதி போன்ற நிலைகளில் பின்பற்ற வேண்டியதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. 

மேலும், வரைவு ஆள்சேர்ப்பு விதிமுறைகள் குறித்து 30 நாள்கள் அதாவது டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அனைத்து அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்திருந்தது. 

Advertisement

Advertisement

மேலும் விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளன, முழுமையாகப் படித்து அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 

அதன் பின்னரே, 59,099 போஸ்ட்மேன் பணியிடங்கள், 1445 மெயில் கார்டு பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட  அதிகாரப்பூர்வமான விதிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments