பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer -I
காலியிடங்கள்: 27 (எலக்ட்ரானிக்ஸ் - 23, மெக்கானிக்கல் - 4)
Advertisement
Advertisement
வயதுவரம்பு: 1.6.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ. 55,000.
தகுதி: பொறியில் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் வேலை: 27 இல் நேர்முகத் தேர்வு!
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager(HR/ADSN,ES&C-QA),
Bharat Electronics Ltd, Jalahalli(P.O), Bangaluru - 560 013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.7.2023
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.