12.7.1976: இந்தியா - யு.எஸ். உறவு வலுப்பெற பிரதமர் விருப்பம்
இந்தியா - யு.எஸ். உறவு வலுப்பெற பிரதமர் விருப்பம் தெரிவித்திருப்பது பற்றி...
நியூயார்க், ஜூலை 11- இந்திய - அமெரிக்க இரு தரப்பு உறவு ஆழமாக வேர் விட வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் இந்திரா காந்தி இன்று ஒரு டெலிவிஷன் பேட்டியில் கூறினார்.
ரஷியாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ இந்தியா கொண்டுள்ள நட்புறவு இந்தியா - அமெரிக்க நட்புறவை பாதிக்க வேண்டும் என்று தாங்கள் ஒரு போதும் கருதியது இல்லை என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா இந்தியாவுக்கு உதவி அளிப்பதையோ அல்லது இந்தியா அமெரிக்காவிடமிருந்து உதவி பெறுவதையோ பொறுத்ததாக இந்திய - அமெரிக்க உறவுகள் இருப்பதை தாம் விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.
Advertisement
Advertisement
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த காலத்தில் நிலவிய தப்பபிப்ராயங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். ”தற்காலிகமாக நிகழக் கூடிய எதையும் விட ஆழமானதாக இருக்க வேண்டியதே நட்புறவு என்று நான் கருதுகிறேன். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நட்புறவு உதவியின் அடிப்படையில் இருப்பதையும் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு விதத்தில் கொடுக்கவும் பெறவும் வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார். ...
வரதட்சிணை பாக்கியாம் - தீ வைத்து மருமகளை கொன்றதாக மாமியார், மாமனார், கணவர் கைது
இந்தூர், ஜூலை. 10 - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்னி சாட்சியாக மருமகளாக்கிக் கொண்ட பெண்ணை, வரதட்சிணை பாக்கி காரணமாக மாமியார் தீயிட்டதால், மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மனோரமா 18 வயதாகும் ஸ்தல ஆஸ்பத்திரியில் தீக்காயங்கள் காரணமாக இறப்பதற்கு முன்பு, வரதட்சிணை ரூ. 5600த்தில் பாக்கி ரூ. 500ஐ மாமியார் வீட்டார் கேட்டுவந்ததாகக் கூறினாள் என்று போலீஸார் கூறினர்.
கடந்த 3-ந் தேதி மனோரமாவின் நாத்தனார் (கணவரின் சகோதரி) பாக்கியைக் கேட்டு வந்ததாகவும், மறுக்கப்படவே, மறுநாள் இரவில் மனோரமா தூங்கிக் கொண்டிருக்கையில், அவரின் புடவை மீது மண்ணெண்ணெயைத் தெளித்து மாமியார் தீ வைத்துவிட்டதாகவும், 5ந்தேதி மனோரமா இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
மனோரமாவின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டனர்.
Prime Minister desires stronger India-US relations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.