FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

7.9.1976: செவ்வாயில் பூகம்பம் உண்டா? வைக்கிங்-2 விண்கலம் ஆய்வு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

4 செப்டம்பர் 2026, 1:10 pm IST
7.9.1976 - Dinamani
பகிர்:

பாசதேனா, கலிபோர்னியா, செப். 6- செவ்வாய் கிரஹத்தில் 'உடோபியா' பகுதியில் வெற்றிகரமாக இறங்கியுள்ள வைக்கிங்-2 அமெரிக்க விண்கலம் அங்கு அதிர்ச்சிகள் உண்டா என்பதை ஆராயத் துவங்கியுள்ளது . இதற்காக செவ்வாய் பாறை சரிவுகள் பற்றி ஆராய்ச்சி நடத்துகிறது.

வைக்கிங்-2 பாறையின் மீது நெங்கியதாலும், வைக்கிங்-1ல் உள்ள அதிர்வு பதிவு மானி இயங்கத் தவறியதாலும் வைக்கிங்-2ன் அதிர்வு பதிவு மானி பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருந்தனர். ஆனால், வைக்கிங்-2ல் உள்ள இக்கருவி எதிர்பார்த்தது போல் நன்கு செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என்று வைக்கிங் திட்ட குழு அங்கத்தினர்களில் ஒருவரான டாக்டர் லதாம் தெரிவித்தார்.

சாதனங்கள் சரியாக இயங்குகின்றன

Advertisement

Advertisement

வைக்கிங்-2 விண்கலம் ஒரு பக்கம் சற்று சரிந்தார் போல் செவ்வாயில் இறங்கியுள்ள போதிலும் சமிஞ்கைகளை அனுப்பும் ஆன்டெனா சாதனத்தின் மீது ஒட்டிக்கொண்டிருந்த போதிலும், எல்லா சாதனங்களும் சரிவர செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

செவ்வாயின் சிவப்பு நிற தரை பகுதி, ஆரெஞ்சு நிற வானத்தை வைக்கிங்- 2 கலர் படங்களாக அனுப்பியுள்ளது. செவ்வாய் மண் பரிசோதனை இவ்வார இறுதியில் துவங்கும் என்று வைக்கிங் திட்ட டைரக்டர் டாம் யங் கூறினார். ...

சென்னையில் விஷ சாராயம் குடித்த மூவர் மரணம்

சென்னை, செப். 6 - திருட்டுத் தனமாகத் தயாரிக்கப்பட்ட, விஷங் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் சாராயத்தைக் குடித்த மூவர் சென்னை நகரில் மரணமடைந்தனர். இவர்களில் திருமலை, சரோஜா என்பவர்கள் கணவன் மனைவியாவர். இவர்கள் வீட்டில்தான், மரணத்திற்குக் காரணமான 'விஷங் கலந்த சாராயம்' விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொருவரின் பெயர் சரவணன் (38) மற்றும் இருவர் மிக ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது:-

சைதாப்பேட்டையை யடுத்த தாடன்டெர் நகரைச் சேர்ந்தவர் திருமலை (25) என்பவர். இவரும், இவரது மனைவி சரோஜாவும் சேர்ந்து, சனிக்கிழமையன்று மாலை, திருட்டுத்தனமாய் விற்பதற்காக சில பொருட்களைச் சேர்த்து போதை தரும் ஒருவித மதுவைத் தயாரித்தனராம். குடிப் பழக்கம் உள்ள அக்கம் பக்கத்திலுள்ள ஒரு சிலருக்கு மட்டும், தங்களது 'விசேஷ' தயாரிப்பைத் தெரியப் படுத்தினராம்.

விஷயம் தெரிந்த சரவணன், ஜெயராமன், சுப்பிரமணியன் ஆகியோர் அன்றிரவு 7 மணி சுமாருக்கு, திருமலையின் குடிசைக்குச் சென்று, ஆளுக்கு ஒரு கிளாஸ் 'சாராயம்' வாங்கிக் குடித்திருக்கின்றனர்.

இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் திருமலையின் குடிசையில் சாராயம் கிடைப்பது, அப்பகுதி முழுவதும் பரவிவிட்டது. ஏராளமானோர் திருமலையின் வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். எல்லோருக்கும் சப்ளை செய்ய போதுமான சரக்கு திருமலையிடம் இல்லாததால், எஞ்சியிருந்ததை வீட்டினுள் வைத்து விட்டு, கதவைத் தாழிட்டுக் கொண்டு விட்டார். மாலையில் தாங்கள், விற்றது போலீசுக்குத் தெரிந்து சோதனை போட வந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்த இருவரும், மீதி இருந்த சாராயத்தைக் குடித்து காலி செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாததை திருமலை உணர்ந்தார். உதவிக்கு மனைவியை அழைத்த பொழுது, அவள் வரவில்லை. வாசலில் சென்ற ஒரு சிறுவனை அழைத்து, மனைவி சரோஜாவைக் கூப்பிடுமாறு கூறியிருக்கிறார். உள்ளே சென்ற சிறுவன் சரோஜா பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டிருக்கிறான். உடனடியாக அக்கம் பக்கத்தினர் கூடி, இருவரையும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மருத்துவர் சோதனை செய்த பொழுதுதான், சரோஜா முன்பே இறந்திருந்தது தெரிய வந்தது. திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ...

summary

7.9.1976: Do earthquakes occur on Mars? Viking-2 spacecraft investigation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments