உணவே மருந்து

செரிமானக் குறைபாட்டை சீராக்கும் கஞ்சி

முதலில் புழுங்கலரிசி நொய்யை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 900 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.

கோவை பாலா

காளான் கஞ்சி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி நொய் - 150  கிராம்
காளான் - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை : முதலில் புழுங்கலரிசி நொய்யை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 900 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். காளானைக் கழுவி சுடுநீரில் 20 நிமிடம் நனைத்து வைத்திருந்து பின் எடுத்து நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காளானை நொய்யரிசியில் சேர்த்து மூடி வைத்து அடுப்பை மிதமாக எரியவிட்டு அடி பிடிக்காமல் அவ்வப்போது கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனை தயாரித்து வைத்துக் கொண்டு சூடு இல்லாவிட்டாலும் தேவையான போது சூடாக்கி உட்கொள்ளலாம்.

பயன்கள் : இந்தக் காளான் கஞ்சியை நீண்ட நாட்களாக செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வேளை உணவாக உட்கொண்டால் செரிமானமின்மை நீங்கும். செரிமானம் சீராகும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

”ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு... !” விஜய்யின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இபிஎஸ்

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 21 பேர் கொலை!

SCROLL FOR NEXT