உணவே மருந்து

முகப்பொலிவு பெற செய்யவேண்டியவை..

முகப்பரு மற்றும் தேமல் போன்ற குறைபாடுகளைப் போக்கி முகத்தில் பொலிவை உண்டாக்க உதவும். 

தினமணி

தேவையான பொருட்கள்

முளைக்  கீரைச் சாறு  - 50 மி.லி ( தேவையான அளவு )

முந்திரிப் பருப்பு.      -   10 

மஞ்சள் தூள்.    -   சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு முளைக் கீரையை  எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சுத்தப்படுத்திய முளைக்கீரையை அரைத்து  சாறு எடுத்துக் கொள்ளவும்.

முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பை உடைத்து சாற்றில் போட்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூளைச் சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். 

தீரும் குறைபாடுகள்

முகப்பரு மற்றும் தேமல் போன்ற குறைபாடுகளைப் போக்கி முகத்தில் பொலிவை உண்டாக்க உதவும். 

இவ்வாறு தயாரித்து வைத்து எடுத்துள்ள முளைக்கீரை விழுதை ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் படுக்க போவதற்கு முன்பு முகத்தில் தடவி காலையில் கழுவி விடவும். குறைந்தபட்சம் 21 நாட்களாவது எடுத்து வந்தால் முகப்பொலிவு உண்டாகும்

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609 , 75503 24609

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT