லஞ்சம்: ராணுவ டாக்டர் கைது
அம்பாலா, அக்.8: ராணுவ பணிகளுக்கு தேர்வாகியுள்ள நபருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்றதாக டாக்டரை சி.பி.ஐ. சனிக்கிழமை கைது செய்தது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இ.என்
அம்பாலா, அக்.8: ராணுவ பணிகளுக்கு தேர்வாகியுள்ள நபருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்றதாக டாக்டரை சி.பி.ஐ. சனிக்கிழமை கைது செய்தது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இ.என்.டி. துறை சிறப்பு மருத்துவராக பணி செய்பவர் வி.எஸ்.யாதவ். ராணுவத்தில் தேர்வாகியுள்ள நபருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை பிற்பகல் அந்த நபருக்கு ராணுவத்தில் சேர மருத்துவ தகுதி இல்லை என்று மருத்துவர் யாதவ் சான்றளித்திருந்தார். இதையடுத்து தம்மை சந்தித்த அந்த நபரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தந்தால் மட்டுமே தகுதிச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து அந்த நபர் சி.பி.ஐ.க்கு புகார் அளித்தார். புகாரை ஏற்ற சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்படி யாதவ் மீது வழக்கு பதிவு செய்தது. யாதவை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, தனது இல்லத்தில் லஞ்சப் பணம் பெற்ற யாதவை சி.பி.ஐ. கைது செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.