FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"ரூ.12 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நகைக்கடைகளுக்கு மட்டும் 1% கலால் வரி'

ஒரு நிதியாண்டில் ரூ.12 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நகைக்கடைகளுக்கு மட்டும் ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஒரு நிதியாண்டில் ரூ.12 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நகைக்கடைகளுக்கு மட்டும் ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
 அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்க, வைர நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 இதற்கு நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தக் கலால் வரி விதிப்புக்கும், ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோர் பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டுமென்ற உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை முதல், நகைக்கடை உரிமையாளர்கள் தேசிய அளவில் 3 நாள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
 இந்த கடையடைப்புப் போராட்டத்தை வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 இந்நிலையில், ஒரு சதவீத கலால் வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஒரு நிதியாண்டில் ரூ.12 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நகைக்கடைகளுக்கு மட்டும் ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும். அதுவும் தங்க, வைர நகை விற்பனைக்கு மட்டுமே இந்த வரி உண்டு, வெள்ளிப் பொருள்களுக்கு கிடையாது.
 ரூ.12 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நகைக்கடைகளுக்கு மட்டும் வரி என்பதால் சிறு நகை வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். ரூ.12 கோடிக்கு கீழ் வருவாய் ஈட்டும் நகைக்கடைக்காரர்கள் முதல் ரூ.6 கோடி வரை ஈட்டும் வருமானத்துக்கு வரிச் சலுகை பெற முடியும்.
 அதே போல நகைகடைகளுக்கு ஒப்பந்த முறையில் நகைகளைச் செய்து வரும் நகைத்தொழிலாளர்கள் எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments