வாக்காளர் அட்டை மட்டுமே வாக்களிப்பதற்கான தகுதி அல்ல: நஜீம் ஜைதி
ஒருவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே அவர் வாக்களிப்பதற்கான தகுதியை பெற்றவராக கருதப்படமாட்டார்
ஒருவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே அவர் வாக்களிப்பதற்கான தகுதியை பெற்றவராக கருதப்படமாட்டார் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறினார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வாக்காளர் ஒருவர், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே வாக்கு அளிப்பதற்கான தகுதியை பெற்றுவிட்டதாக கருத வேண்டாம். ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.
Advertisement
Advertisement
எனவே, ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது தொகுதிக்கான வாக்குப் பதிவு அதிகாரியை சந்தித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
எனினும் எந்த ஒரு வாக்காளரும் தனது வாக்களிக்கும் உரிமையை இழக்காத வகையில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மாற்று ஆவணங்கள் குறித்த அறிவிக்கை தனியே வெளியிடப்படும்.
வாக்காளர் அடையாள சீட்டு
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்படும். வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக வாக்குச் சாவடி அலுவலர்களால் அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த சீட்டு வழங்கப்படும். வாக்காளர் அடையாள சீட்டு வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும் என்றார் ஜைதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.