முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் சுங்க கட்டண ரத்து சலுகை நீட்டிப்பு!

புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை...

Updated On : 24 நவம்பர் 2016, 3:54 pm IST
பகிர்:

புதுதில்லி: புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.

தொடர்ந்தும் பண நோட்டுகள் புழக்கத்தில் நிலவிய சிக்கல் காரணமாக இந்த சலுகையானது பின்னர் ர் நவம்பர் 14 , 18 மற்றும் 24 என அடுத்தடுத்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த சலுகை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், நிலைமை சீரடைய மேலும் சிலநாட்கள் தேவைப்படும் காரணத்தால் இந்த சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments