ஹரியாணா: மேயர் பதவி தேர்தலில் பாஜக வெற்றி
ஹரியாணா மாநிலத்தில் 5 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் 5 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் ஹிசார், கர்னால், பானிபட், ரோதக், யமுனாநகர் உள்ளிட்ட 7 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போட்டியிடவில்லை. அக்கட்சியினர் சில இடங்களில் சுயேச்சைகளுக்கு ஆதரவளித்தனர். இருப்பினும், பாஜக மற்றும் இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி இடையே போட்டி நிலவியது.
இதில் ஹிசார், கர்னால், பானிபட், ரோதக், யமுனாநகர் ஆகிய மாநகராட்சி மேயர் பதவி தேர்தலுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இவை அனைத்திலும் பாஜகவே வென்றது. தேர்தலில் இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி படுதோல்வியடைந்தது. சுயேச்சைகளை விட அக்கட்சியின் வேட்பாளர்கள் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர்.
ஹரியாணாவில் இதற்கு முன்பு மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதனிடையே, மேயர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய ஹரியாணா அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன்படி, முதல்முறையாக மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 5 மேயர் பதவிகளையும் பாஜகவே வென்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.