FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என்எஸ்ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி உள்ளது: அமெரிக்கா

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று தெற்கு மற்றும் மத்திய

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணையமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கூறினார்.
வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார். அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
48 உறுப்பினர்களைக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில், அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே புதிதாக ஒரு நாடு உறுப்பினராக சேர முடியும். மேலும், அந்த நாடு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனினும், என்எஸ்ஜி கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியா உறுப்பினராவதற்கு தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறது.
என்எஸ்ஜி கூட்டமைப்பில் உறுப்பினராவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளன. எனவே, அந்தக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு, அந்நாட்டின் சார்பில் அமெரிக்கா தொடர்ந்து வாதிடும்.
சிறுபான்மையினருக்கு சுதந்திரம்: இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜனநாயக நாடுகளை அமெரிக்கா மதிக்கிறது. ஏனெனில், அந்த நாடுகள் தங்களை சுயமாகவே சரிசெய்துகொள்ளும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு. அங்கு சிறுபான்மையினருக்கு சட்டப்பூர்வமான முறையில் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாக். பயங்கரவாதம்: பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவின் முக்கியப் பகுதியாக, பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்த பேச்சுவார்த்தை எப்போதும் இருந்து வருகிறது. லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலருக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு தடை விதித்தது. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசிடம் அமெரிக்கா தனது கவலையை தெரிவித்து விட்டது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதாக உதட்டளவில் உறுதியளிக்காமல், அதற்கேற்ப ஆக்கப்பூர்வமாகச் செயல்படுமாறு புதிய அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்றார் ஆலிஸ் வெல்ஸ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments