துர்க்மேனிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு
துர்க்மேனிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
துர்க்மேனிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக அரசுகளுக்கிடையேயான குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா இரு நாள் பயணமாக ரஷியா சென்றார்.
ரஷியாவுக்கு செல்லும் வழியில், துர்க்மேனிஸ்தான் நாட்டின் அஷ்காபாத் விமான நிலையத்தில் இறங்கி ரஷ்யாவுக்கு விமானம் மாறிய சுஷ்மாவை, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரஷித் மெரிடோவ் வரவேற்றார். பின்பு இருவரும் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்து சிறிது நேரம் விவாதித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.