FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி: காஷ்மீர் தொழிலதிபருக்கு நீதிமன்றம் ஜாமீன்

பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்க நிதியுதவி கொடுத்ததாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் தொழிலதிபர் ஜஹூர் வாதாலிக்கு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்க நிதியுதவி கொடுத்ததாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் தொழிலதிபர் ஜஹூர் வாதாலிக்கு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.
வாதாலிக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி ஜாமீன் மறுத்து விட்டது. இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு, நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.2 லட்சம் பிணைத் தொகை செலுத்திவிட்டு ஜாமீனில் செல்லுமாறு அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வாதாலி தனது கடவுச்சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது. சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கவோ கூடாது. மீறினால், ஜாமீன் ரத்து செய்யப்படும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, வாதாலிக்கு ஜாமீன் வழங்குவதற்கு தேசியப் புலனாய்வு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில், இந்த வழக்கில், வாதாலி இதுவரை அளித்த விளக்கம் திருப்தியளிக்கும் விதமாக இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசராணைக்கு இடையூறு ஏற்படுத்துவார். மேலும், சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்பி விடுவார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜஹூர் வாதாலியை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி கைது செய்தனர். வாதாலி, லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது சலாவுதீன் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டினர் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர் என்றும் என்ஐஏ குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் தொகை, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை வந்தடைந்து, அங்கிருந்து வாதாலி மூலமாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதிகளுக்குச் சென்றடைந்தது. பள்ளத்தாக்கில் கல்லெறியும் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அந்த தொகை கொடுக்கப்பட்டது என்று என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments