மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கியவர் மரணம்: வைரலான விடியோ
மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர் அடுத்த 4 மணிநேரத்தில் உயிரிழந்தார். அவர் அந்த பாம்பை விழுங்கிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர் அடுத்த 4 மணிநேரத்தில் உயிரிழந்தார். அவர் அந்த பாம்பை விழுங்கிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹிபால் சிங் (40), கூலித் தொழிலாளி. இவர் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கியதால் மரணமடைந்தார். இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில்,
மதுபோதையில் இருந்த மஹிபால் சிங், சாலையில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து வித்தை காட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தூண்டுதலின் பேரில் அந்தப் பாம்பை உயிருடன் விழுங்கியுள்ளார். பின்னர் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அந்தப் பாம்பு வெளியே வரவில்லை.
Advertisement
Advertisement
இதனால் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹிபால், அடுத்த 4 மணிநேரத்தில் விஷத்தின் தாக்கத்தால் மரணமடைந்ததாக தெரிவித்தனர். ஆனால் இதுதொடர்பாக மஹிபாலின் குடும்பத்தினர் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வழக்குப் பதிவு செய்து தூண்டியவர்கள் குறித்து விசாரித்து வருவதாக ராஜ்புரா கோட்வாலி போலீஸார் தெரிவித்தனர்.
மஹிபால் சிங், மதுபோதையில் பாம்புடன் வித்தை காட்டிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. உயிரிழந்த மஹிபாலுக்கு மனைவி, மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.