முகப்பு
இந்தியா

அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் தெரியுமா?: மத்திய அமைச்சர் கிண்டல் 

அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டல் செய்துள்ளார்.

Updated On : 21 ஏப்ரல் 2019, 1:18 pm IST
பகிர்:

புது தில்லி: அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டல் செய்துள்ளார்.

வழக்கமாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை தென்னிந்தியாவில் கேரளாவின் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அடுத்த தேர்தலில் ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டல் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

தற்போது அமேதியில் போட்டியிடும் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்டு விவோம்  என்பதாலேயே அவர் வயநாட்டிலும் போட்டியிடுகிறார்.

வயநாட்டில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கே தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு எந்த சேவையும் செய்ய இயலாது.

போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் ராகுல் தோல்வியடைவார். எனவே அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில்தான் தொகுதியைத் தேடுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments