FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா பாதிப்பு: மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, ராஜஸ்தான்

கரோனாவால் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றன. 

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனாவால் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றன. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வைரஸால் இத்துடன் 21,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 681பேர் பலியாகி உள்ளனர். 

நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,427-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,624 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement

கரோனாவால் குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் 9 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தில்லியில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,376-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தில்லி மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. 

இதேபோல் ராஜஸ்தானில் இன்று மேலும் 76 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 1964ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments