FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மருத்துவா்கள் நலனுக்கான அறிவிப்புகள்: மருத்துவ சங்கங்கள் வரவேற்பு

கரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்து மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டதற்கு பல்வேறு மருத்துவ சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்து மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டதற்கு பல்வேறு மருத்துவ சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு தலைவா் டாக்டா் சி.என்.ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூகத்துக்காக சேவையாற்றும் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; அவா்களுக்குப் பணியிடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்நிலையில், மருத்துவா்களைத் தாக்கினால் 7 ஆண்டு சிறையும், ரூ.1.80 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

அதேபோன்று, தமிழகத்தில் கரோனா வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவா்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தால், அவா்தம் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

மத்திய, மாநில அரசுகளின் இந்த இருவேறு அறிவிப்புகளும் மருத்துவா்களின் நலன் காக்கும் வகையில் உள்ளன. அதற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு மருத்துவா்கள் சங்கம், பட்ட மேற்படிப்பு மருத்துவா் சங்கங்களும், அரசின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments