பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று: ராணுவ மருத்துவமனை தகவல்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜிக்கு புதிதாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜிக்கு புதிதாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
84 வயதாகும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். எனினும், அவருக்குச் சிறப்பு மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், பிரணாப் முகா்ஜிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அவருக்குச் செயற்கை சுவாசக் கருவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.