முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 1 கோடியைத் தாண்டியது 

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 25,152 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,00,04,599 ஆக அதிகரித்துவிட்டது.

Updated On : 19 டிசம்பர் 2020, 9:58 am IST
பகிர்:

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 25,152 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,00,04,599 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 347 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,45,136 ஆக அதிகரித்துவிட்டது. 

Advertisement

Advertisement

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,885 பேர் குணமடைந்து வீடு திரும்பு உள்ளதால் இதுவரை 95,50,712 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா்.

இப்போதைய நிலையில் நாட்டில் 3,08,751 போ் கரோனா பாதிப்புடன் உள்ளனா். தொடா்ந்து 13-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 18-ஆம் தேதி வரை 16,00,90,514 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 11,71,868 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.