FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி தற்கொலை

ஹரியாணாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டார். 

Updated On : 18 ஜூன் 2020, 6:27 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஹரியாணாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டார். 

ஹரியாணா மாநிலம், யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள ஜகத்ரி பகுதியில் வசித்து வருபவர் 52 வயதுடையவர். இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவே அம்பாலாவில் உள்ள எம்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

Advertisement

பெட் சீட்டை கொண்டு தூக்கு மாட்டி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 தினங்களாக அவர் பதற்றத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments