FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருமலையில் 12,415 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 12,415 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 8,046 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

28 ஜனவரி 2024, 9:12 am IST
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 12,415 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 8,046 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

கொவைட் தொற்று காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம்.

Advertisement

Advertisement

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வரவேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments