முகப்பு
இந்தியா

மணிப்பூர்: பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 13 அக்டோபர் 2021, 11:42 am IST
மணிப்பூர்: பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
பகிர்:

மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மணிப்பூரின் கங்க்போக்பியில் உள்ள கம்னான் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று(அக்-12) நடைபெற்றது.

இதில் அப்பகுதி மக்கள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அக்கூட்டதில் புகுந்த குகி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இறந்தவர்களில் 3 பேரின் உடலை மீட்டிருப்பதாகவும் 2 பேரின் உடலைத் தேடி வருவதாகவும் இத்தாக்குதலில் ஈடுபட்ட குகி பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக மணிப்பூரின் ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த அக்-10 ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments