இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 56,83,682 முகாம்களில் 48,52,86,570 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 62,53,741 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,09,33,022 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,668 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து 38 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 18,47,518 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி 2.36 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.31 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 58 நாள்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.