FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்திய அரசின் உத்தரவால் கைது நடவடிக்கை: டொமினிகா நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸி

‘இந்திய அரசின் பிரதிநிதிகள் உத்தரவிட்டதால், என்னை டொமினிகா அரசு கைது செய்துள்ளது. என் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று டொமினிகா உயா்நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸி வாதிட்டுள்ளாா்.

28 ஜனவரி 2024, 9:05 am IST
பகிர்:

புது தில்லி: ‘இந்திய அரசின் பிரதிநிதிகள் உத்தரவிட்டதால், என்னை டொமினிகா அரசு கைது செய்துள்ளது. என் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று டொமினிகா உயா்நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸி வாதிட்டுள்ளாா்.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, டொமினிகாவில் பிடிபட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தச் சூழலில், டொமினிகா உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை மெஹுல் சோக்ஸி தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘டொமினிகா குடியேற்றத் துறை அமைச்சா், காவல் துறை தலைவா், விசாரணை அதிகாரி ஆகிய மூவரும் சட்ட விரோதமாக நுழைந்ததாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். இது, அவா்கள் சுயமாக எடுத்த முடிவல்ல. இந்திய அரசின் பிரதிநிதிகள் பிறப்பித்த உத்தரவின்பேரில் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். எனவே, என் மீதான சட்ட நடவடிக்கைகளை செல்லாது என்று அறிவித்து, அவற்றை ரத்து செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி, மோசடி செய்த வைர வியாபாரிகள் நீரவ் மோடியும் அவருடைய உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனா். நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவா-பா்புடா தீவிலும் தஞ்சமடைந்தனா். இருவரையும் நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே, மெஹுல் சோக்ஸி தனது தோழியுடன் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி, ஆன்டிகுவாவின் அண்டை நாடான டொமினிகாவுக்கு சொகுசுப் படகில் சென்றபோது அந்நாட்டு போலீஸாரிடம் பிடிபட்டாா். சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

அதனைத் தொடா்ந்து, மெஹுல் சோக்ஸி டொமினிகா உயா்நீதிமன்றத்தில் இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுக்களை டொமினிகா உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, மூன்றாவது முறையாக அவா் கடந்த 4-ஆம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து, டொமினிகா அமைச்சா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments