ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் வியாழக்கிழமை இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி வியாழக்கிழமை இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திகி, பிரபல பத்திரிக்கை ஒன்றில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்க சென்ற குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் நேற்று இரவு பலியானார்.
கடந்த 2018ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர் டேனிஷ் சித்தி. தில்லி கலவரம், கரோனா இரண்டாம் அலையின்போது தில்லி மைதானத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டதை இவர் எடுத்த புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
சில நாள்களுக்கு முன்பு, தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு காணொலியை பதிவு செய்து தலிபான்களின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துள்ளேன் என்று சித்திக் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.